தினம் ஒரு நாட்டின் மாநிலம் – அபிட்ஜான்

அபிட்ஜான் மாநிலத்துக்காக ஜெபிப்போம்,
அபிட்ஜான் (Abidjan) என்பது ஐவரி கோஸ்ட் (கோட் டி ஐவரி) நாட்டின் பதினான்கு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இது மிகப்பெரிய நகரமும் வணிகத் தலைநகரமும் ஆகும். அபிட்ஜான் நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில், கினியா வளைகுடாவில் அமைந்துள்ளது.
அபிட்ஜான் மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாகும். நாட்டின் 80% பொருளாதார நடவடிக்கைகள் அபிட்ஜானிலேயே குவியமடைந்துள்ளன. அபிட்ஜானில் கோகோ பதப்படுத்துதல் மிக முக்கியத் தொழிலாக உள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு, ஜவுளி, உரம், கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் வாகனங்கள் அசெம்பிள் செய்யும் தொழிற்சாலைகள் இங்கு பரவலாக உள்ளன. முக்கிய ஈர்ப்புகளில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க க்ராண்ட்-பாசாம் கடற்கரை நகரம், செயின்ட் பால் பேராலயம், அபிட்ஜான் மிருகக்காட்சி சாலை, கலை மையம் ஆகியவை அடங்கும்.
அபிட்ஜான் மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.