தினம் ஒரு நாட்டின் மாநிலம் – மபூட்டோ நகரம்

மபூட்டோ நகரத்துக்காக ஜெபிப்போம்,
மபூட்டோ நகரம் (Maputo City) மொசாம்பிக் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்த நகரம் மபூட்டோ மாகாணத்தால் சூழப்பட்டுள்ளது, ஆனால் 1998 முதல் ஒரு தன்னிறைவு பெற்ற, தனி மாகாணமாக நிர்வகிக்கப்படுகிறது.
மபூட்டோ ஒரு துறைமுக நகரமாகும், இதன் பொருளாதாரம் வர்த்தகத்தை மையமாகக் கொண்டது. பருத்தி, சீனி, குரோமைட், சிசல், கொப்பரை போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் சிமெண்ட், மட்பாண்டம், காலணி மற்றும் இரப்பர் ஆகியவை பிரதான உற்பத்திப் பொருட்களாகும். மபூட்டோ வளைகுடாவின் மேற்குப் பகுதியில், எஸ்பிரிட்டோ சாண்டோ முகத்துவாரத்திற்கு அருகில் மபூட்டோ அமைந்துள்ளது. முக்கிய ஈர்ப்புகளில் மபூட்டோவின் கோட்டை, டுண்துரு கார்டன்ஸ், சுதந்திர சதுக்கம், மபூட்டோ நகர சபை, சமோரா மச்செல் சிலை, இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், விலா அல்கார்வ் மற்றும் மபுடோ ரயில் நிலையம் ஆகியவை அடங்கும்.
மபூட்டோ நகர மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.