தினம் ஒரு நாட்டின் மாநிலம் – என்’ட்ஜமெனா

என்’ட்ஜமெனா மாநிலத்துக்காக ஜெபிப்போம்
என்’ட்ஜமெனா (N’Djamena) சாட் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது சாட் நாட்டின் தென்மேற்குப் பகுதியில், சாட் ஏரிக்கு அருகில், சாரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. என்’ட்ஜமெனா என்பதற்கு ‘ஓய்வு இடம்’ அல்லது ‘அமைதியான இடம்’ என்று பொருள்.
தலைநகரான என்’ட்ஜமெனா நகரம் லோகோன் நதி மற்றும் சாரி நதி சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். இது சாட் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக விளங்குகிறது. இறைச்சி, மீன் மற்றும் பருத்தி பதப்படுத்துதல் ஆகியவை இங்குள்ள முக்கியத் தொழில்களாகும். மேலும், இது கால்நடைகள், உப்பு, பேரீச்சை மற்றும் தானியங்களுக்கான ஒரு மாநில சந்தையாகவும் திகழ்கிறது. என்’ட்ஜமெனா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சாட் தேசிய அருங்காட்சியகம், அல்-மௌனா கலாச்சார மையம், அமைதியின் அன்னை தேவாலயம் மற்றும் பல மசூதிகள் அடங்கும்.
இந்த மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.