தினம் ஒரு ஊர் – மேலச்சொக்கநாதபுரம்

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்,
மேலச்சொக்கநாதபுரம் (Melachokkanathapuram) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தமிழ்நாடு – கேரளா எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக கூவலிங்கம் ஆறு உள்ளது. இப்பகுதியில் ஏலக்காய், தேயிலை, காபி மற்றும் மிளகு ஆகியவை முக்கிய விளைபயிர்களாக சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பேரூராட்சியில் முக்கிய சுற்றுலா தளமாக போடி மெட்டு அமைந்துள்ளது. இது ஒரு அழகான மலை வாழிடம் மற்றும் கிராமமாகும். இப்பகுதியில் புலி அருவி மற்றும் மூடுபனி சூழ்ந்த மலைப்பாதைகள் முக்கிய அழகிய இடங்களாக உள்ளன. இதன் மிக அருகில் மூணாறு, மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
மேலச்சொக்கநாதபுரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.