தினம் ஒரு நாட்டின் மாநிலம் – லாயூன்-சாகியா எல் ஹம்ரா

ஜெபிப்போம்,
லாயூன்-சாகியா எல் ஹம்ரா (Laâyoune-Sakia El Hamra), என்பது மொராக்கோவின் பன்னிரண்டு நிர்வாக மாகாணங்களில் ஒன்றாகும். இது முக்கியமாக மேற்கு சஹாரா எனும் சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் மேற்குப் பகுதி மொராக்கோவின் ஆக்கிரமிப்பிலும், கிழக்குப் பகுதி சஹ்ராவி அரபு ஜனநாயகக் குடியரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
லாயூன்-சாகியா எல் ஹம்ரா-ன் பொருளாதாரம் காடுகள் மேம்பாடு, கடல்சார் மீன்பிடித் தொழில், சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழில் (பாஸ்பேட், உப்பு) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதன் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. டார்பாயா, எல் மர்சா மற்றும் புஜ்தூர் ஆகிய நகரங்கள் அட்லாண்டிக் கடற்கரையிலும், கேனரி தீவுகள் கடற்பகுதியிலும் அமைந்துள்ளன. மொராக்கோ சுவர் இம்மாகாணத்தின் ஊடாகச் செல்கிறது.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.