Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஓஹாங்வெனா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஓஹாங்வெனா
கண்டம் – ஆப்பிரிக்கா
நாடு – நமீபியா
மாநிலம் – ஓஹாங்வெனா
மொத்தப் பரப்பளவு – 10,706 கிமீ²
மக்கள் தொகை – 337,729
தலைநகரம் – ஈன்ஹானா
அலுவல் மொழி – ஓஷிவாம்போ
முதன்மைத் தொழில் – விவசாயம்

ஓஹாங்வெனா மாநிலத்துக்காக ஜெபிப்போம்,

ஓஹாங்வெனா (Ohangwena) நமீபியாவின் பதினான்கு பகுதிகளில் ஒன்றாகும். இது நமீபியா நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

ஓஹாங்வெனா பகுதியின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு சிறு அளவிலான மகங்கு எனப்படும் கம்பு சாகுபடியும், கால்நடை வளர்ப்பும் பிரதான நடவடிக்கைகளாக உள்ளன. இந்த மாநிலமானது குவெலை வடிநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இது வண்டல் மண், களிமண் மற்றும் மணற்பாறைகளால் ஆன, மிகவும் சமதளப்பரப்பைக் கொண்ட நிலப்பகுதியாகும். ஓஹாங்வெனா மாநிலத்தின் தலைநகரான ஈன்ஹானா பகுதியில் ஈன்ஹானா நினைவுச் சன்னதி அமைந்துள்ளது. நமீபியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஓஹாங்வெனா பிராந்திய நூலகம் உள்ளது. இது இம்மாநிலத்தின் முக்கிய நூலகமாகும்.

ஓஹாங்வெனா மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.