தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ரிவர் ஜீ

ரிவர் ஜீ கவுண்டிக்காக ஜெபிப்போம்,
ரிவர் ஜீ (River Gee) என்பது லைபீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு கவுண்டி ஆகும்.
ரிவர் ஜீ கவுண்டியில் நடுத்தர அளவிலான குன்றுகள் மற்றும் பல்வேறு பள்ளத்தாக்குகளுடன் கூடிய தாழ்வான வெப்பமண்டல காடுகள், பசுமை மாறா காடுகள் உள்ளன. மேட்டு நிலங்கள் நெல் சாகுபடிக்கு உகந்ததாக இருக்கும் அதே வேளையில், தாழ்வான பகுதிகள் சேனைக்கிழங்கு, கொக்கோ, வாழை, உருளைக்கிழங்கு, காய்கறிகள், ரப்பர், காபி மற்றும் கரும்பு சாகுபடிக்கு உகந்ததாக உள்ளன. முக்கிய சுற்றுலா அம்சங்களில் இந்த கவுண்டியின் மிகப்பெரிய இயற்கை அரணான கிரேபோ-கான் தேசியக் காடு, அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் மறைந்திருக்கும் இயற்கை நீர்வீழ்ச்சியான பெல்லி சாஹ்வா நீர்வீழ்ச்சி, கவல்லா நதி ஆகியவை அடங்கும். முக்கிய பழங்குடி இனக்குழுக்கள்: கிரான், ஜியோ, கெப்பல், மனோ.
ரிவர் ஜீ கவுண்டி மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.