தினம் ஒரு ஊர் – மேலூர்

தினம் ஒரு ஊர் – மேலூர்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குன்னூர்
பரப்பளவு – 4306.12 ஹெக்டேர்
மக்கள் தொகை – 13,244
ஆண்கள் – 6,442
பெண்கள் – 6,802
குடும்பங்கள் – 3,944
தொழில் – விவசாயம், சுற்றுலா
மேலூர் (Melur) என்பது தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டத்தில் உள்ள ஓர் பெரிய கிராமமாகும். இது உதகமண்டலத்திலிருந்து தெற்கே 14 கி.மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து 13 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. மேலும், அவர்கள் கொய்மலர் சாகுபடி, காளான் சாகுபடி, ஸ்ட்ராபெர்ரி பழ சாகுபடி, மலைக்காய்கறிகள் சாகுபடி மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த சைனீஸ் காய்கறிகளை பயிரிடுகின்றனர். மேலும் பல ஏக்கர் பரப்பளவில் சௌசௌ (மேரக்காய்) விவசாயத்தினால் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.
மேலூர் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.