Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கோத்தகிரி

தினம் ஒரு ஊர் – கோத்தகிரி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கோத்தகிரி
பரப்பளவு – 1060.78 ஹெக்டேர்
மக்கள் தொகை – 7,952
ஆண்கள் – 3,755
பெண்கள் – 4,197
குடும்பங்கள் – 2,319
தொழில் – விவசாயம், சுற்றுலா

கோத்தகிரி (Kotagiri), தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் அமைந்த மலைநகரம் ஆகும். இது கோத்தர் இன மக்களின் தாயகப் பகுதியாகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. மேலும் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, மேரைக்காய் போன்றவை பயிரிடப்பட்டும்

வருகின்றது. மலையேற்றம் முதல் பாறை ஏறுதல் வரை, கோத்தகிரியில் ஏராளமான தலங்கள் உள்ளன. மூடுபனி மூடிய மலைகள், பசுமையான புல்வெளிகள், ஆடம்பரமான தோட்டங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது கோத்தகிரி.

கோத்தகிரி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6