தினம் ஒரு ஊர் – கிண்ணக்கொரை

தினம் ஒரு ஊர் – கிண்ணக்கொரை
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குந்தா
பரப்பளவு – 2013.13 ஹெக்டேர்
மக்கள் தொகை – 1,306
ஆண்கள் – 605
பெண்கள் – 701
குடும்பங்கள் – 475
தொழில் – விவசாயம், சுற்றுலா
கிண்ணக்கொரை (Kinnakorai) இந்தியாவின் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். நீலகிரி மாவட்டத்தின் கடைசி கிராமம் இது. தமிழ்நாட்டின் கடைசி எல்லை எனவும் கூறப்படுகிறது. இது ஊட்டிக்கு தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு கிண்ணக்கொரை காட்சி முனை அமைந்துள்ளது. தேயிலைத் தோட்டங்கள், காடுகள், பனிமூட்டம் நிறைந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளது. அழகிய மலை கிராமமான கிண்ணக்கொரை கிராமம் அருகே, மலைகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்கள் ரம்மியத்தை ஏற்படுத்தும்.
கிண்ணக்கொரை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.