தினம் ஒரு ஊர் – ஓ’வேலி

தினம் ஒரு ஊர் – ஓ’வேலி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கூடலூர்
பரப்பளவு – 35.41 சகி.மீ.
மக்கள் தொகை – 21,943
ஆண்கள் – 10,672
பெண்கள் – 11,271
குடும்பங்கள் – 5317
தொழில் – விவசாயம், சுற்றுலா
ஓ’வேலி (O’ Valley) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இது கூடலூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி, முதுமலை தேசியப் பூங்காவிற்கும் புதிய அமரம்பலம் வனப் பாதுகாப்பகத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் தேயிலை முக்கியத் தொழிலாகும். மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குறுமிளகு, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க கிராமமாகும்.
ஓ’வேலி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.