Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – உத்தமபுரம்

தினம் ஒரு ஊர் – உத்தமபுரம்
மாவட்டம் – தேனி
வட்டம் – உத்தமபாளையம்
தொழில் – விவசாயம், சுற்றுலா

உத்தமபுரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,

உத்தமபுரம் (Uthamapuram) என்பது தமிழ்நாடு, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமும், பழைமையான கம்பம் நகரத்தின் ஒரு பகுதியுமாகும். இது உத்தம நாயக்கன் என்ற குறுநில அரசர் ஆட்சி செய்த பகுதி என்பதால் உத்தமபுரம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கம்பம் நகரின் உருவாக்கத்திலும் வரலாற்றிலும் உத்தமபுரம் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இப்பகுதி, உள்ளூர் கிணறுகளிலிருந்து பெறப்படும் மிகச்சிறந்த, தரமான குடிநீருக்குப் புகழ்பெற்றதாகும். புகழ்பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி ஆகியவை மேலும் வளம் சேர்க்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாகும். உத்தமபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் முப்போகம் திராட்சை சாகுபடி செய்யப்படுவது இதன் தனிச்சிறப்பாகும். இப்பகுதியில் நெல் விவசாயம் சிறப்பாகவே உள்ளது.

உத்தமபுரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.