Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – உதகை கிராமப்புறம்

தினம் ஒரு ஊர் – உதகை கிராமப்புறம்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 2924.98 ஹெக்டேர்
மக்கள் தொகை – 8,214
ஆண்கள் – 4,097
பெண்கள் – 4,117
குடும்பங்கள் – 2,419
தொழில் – விவசாயம், சுற்றுலா

உதகை கிராமப்புறம் என்பது அதிக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த, தற்போது இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தளமாக தேர்வு செய்யப்பட்டுள்ள உதகமண்டல வட்டத்தில் அமைந்துள்ளது.

இங்கு உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ் போன்ற மலைக் காய்கறிகள் மற்றும் தேயிலை பயிரிடுதல் முக்கியத் தொழிலாகும். நீலகிரி தேயிலை என்பது இப்பகுதிக்கு மட்டுமே உரித்தான ஒரு கருப்பு தேயிலை வகையாகும். தோடர் மற்றும் பிற பழங்குடி மக்கள் பாரம்பரியமான மந்து எனப்படும் குக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

உதகை கிராமப்புற மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.