தினம் ஒரு ஊர் – போ.மீனாட்சிபுரம்

போ.மீனாட்சிபுரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
போ.மீனாட்சிபுரம் (B.Meenakshipuram) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். இது தேனி – போடிநாயக்கனூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி ஒரு வயலும் வயல் சார்ந்த நகரமாகும். இப்பேராட்சி விவசாயத்தைச் சார்ந்தது. இப்பகுதியில் பருத்தி, நெல் மற்றும் பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. பாரம்பரிய மற்றும் நவீன நெல் ரகங்கள் இங்கு பரவலாக விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதியில் வணிக ரீதியாக அதிக லாபம் தரும் தென்னை மரத் தோட்டங்களும், வாழைச் சாகுபடியும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் இப்பேராட்சி பால்வளம் மற்றும் மீன்வளம் நிறைந்த பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் குளம் விவசாயத்திற்கு மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
போ.மீனாட்சிபுரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.