Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – மேகமலை

தினம் ஒரு ஊர் – மேகமலை
மாவட்டம் – தேனி
வட்டம் – ஆண்டிபட்டி
பரப்பளவு – 32198.36 ஹெக்டேர்
மக்கள் தொகை – 8,348
ஆண்கள் – 4,303
பெண்கள் – 4,045
குடும்பங்கள் – 2,585
முதன்மைத் தொழில் – விவசாயம்

மேகமலை கிராமத்துக்காக ஜெபிப்போம்,

மேகமலை (Megamalai) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கிராமம் ஆகும். மேகமலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். மேகமலை, பச்ச குமாச்சி (பச்சை மலைகள்) என்றும் அழைக்கப்படுகிறது. மூடுபனி மூடிய மலைகள், உயர்ந்த மலைகளின் அழகு, அமைதியான சூழல், பசுமையான நிலப்பரப்பு, தேயிலை மற்றும் காபி பயிர்த் தோட்டங்கள், சமவெளிகள், ஏரிகள் என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை காட்சி முனை, வனவிலங்கு சரணாலயம், மேகமலை அருவி, சுருளி அருவி, மணலாறு, இரவங்கலாறு அணை மற்றும் மேல்மணலாறு போன்ற அணைகள், மகாராஜா மெட்டு காட்சிமுனை மற்றும் வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும். இங்கு தேயிலை, ஏலம் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

மேகமலை மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.