தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஒஷிகோட்டோ

ஒஷிகோட்டோ மாநிலத்துக்காக ஜெபிப்போம்,
ஒஷிகோட்டோ (Oshikoto) என்பது நமீபியாவின் 14 மாநிலங்களில் ஒன்றாகும். இது நமீபியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலம் ஒட்ஜிகோட்டோ ஏரியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
ஒஷிகோட்டோ பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவை முக்கிய பொருளாதார நடவடிக்கைகளாக உள்ளன. வடக்குப் பகுதியில் கம்பு (மகாங்கு) பிரதான பயிராக உள்ளது. எடோஷா தேசியப் பூங்கா, நமீபியாவின் மிக முக்கியமான மற்றும் ஆப்பிரிக்காவின் முதன்மையான வனவிலங்கு சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். முதலாம் உலகப் போரின் போது ஜெர்மன் படைகள் தங்களது ஆயுதங்களையும் பீரங்கிகளையும் ஒட்ஜிகோட்டோ ஏரிக்குள் வீசிச் சென்றதாக வரலாறு கூறுகிறது. இந்த ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வரலாற்று ஆயுதங்கள் மற்றும் இப்பகுதியில் வெட்டி எடுக்கப்பட்ட அரிய வகை தாதுக்கள் சுமேப் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒஷிகோட்டோ மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.