Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – குன்னூர்

தினம் ஒரு ஊர் – குன்னூர்
மாவட்டம் – தேனி
வட்டம் – ஆண்டிபட்டி
பரப்பளவு – 1675.68 ஹெக்டேர்
மக்கள் தொகை – 5,387
ஆண்கள் – 2,768
பெண்கள் – 2,619
குடும்பங்கள் – 1,461
முதன்மைத் தொழில் – விவசாயம்

குன்னூர் கிராமத்துக்காக ஜெபிப்போம்,

குன்னூர் (Kunnur) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஆண்டிபட்டியில் உள்ள வட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ளது. தேனி நகர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். குன்னூர் கிராமப் பகுதிகளில் மானாவாரி (மழைசார்) மற்றும் கிணற்றுப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியின் தட்பவெப்ப நிலை மற்றும் மண் வளத்திற்கு ஏற்ப பயிர்கள் பயிரிடப்படுகின்றன. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை மற்றும் தோட்டக்காய்கறிகளான கத்தரிக்காய், தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி வழியாக வைகை ஆறு செல்கிறது.

குன்னூர் மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.