Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – ஜி. உசிலம்பட்டி

தினம் ஒரு ஊர் – ஜி. உசிலம்பட்டி
மாவட்டம் – தேனி
வட்டம் – ஆண்டிபட்டி
பரப்பளவு – 577.76 ஹெக்டேர்
மக்கள் தொகை – 2,376
ஆண்கள் – 1,169
பெண்கள் – 1,207
குடும்பங்கள் – 665
முதன்மைத் தொழில் – விவசாயம்

ஜி. உசிலம்பட்டி கிராமத்துக்காக ஜெபிப்போம்,

ஜி. உசிலம்பட்டி (G. Usilampatti) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா தலைமையகத்திலிருந்து தோராயமாக 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஜி. உசிலம்பட்டி கிராமத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக விளங்குகிறது. இப்பகுதியில் விவசாயிகள் அறிவியல் முறைப்படி அதிக அடர்த்தி நடவு முறையில் மா சாகுபடி செய்து நல்ல விளைச்சலைப் பெறுகின்றனர். மேலும் செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வாழை ரகங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. வராக ஆறு, வைகை அணை இப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளன. ஜி. உசிலம்பட்டி கிராமப் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள புதுக்குளம் மற்றும் அதன் நீர்வரத்துக் கால்வாய்கள் இப்பகுதியின் முக்கிய விவசாய நீராதாரம் ஆகும்.

ஜி. உசிலம்பட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.