தினம் ஒரு ஊர் – மல்லிங்காபுரம்

மல்லிங்காபுரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
மல்லிங்காபுரம் (Mallingapuram) என்பது தமிழ்நாடு, தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கம்பம் – போடிநாயக்கனூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கிராமம், உத்தமபாளையத்திலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. பண்ணைப்புரம், கரியணம்பட்டி, பல்லவராயன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இக்கிராமம் ‘தாய்கிராமம்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. இப்பகுதி மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. மல்லிங்காபுரத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர்த் திட்டம் நிறைவேற்றி வருகிறது. இப்பகுதிக்குச் சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நீர் வரத்து உள்ளது. அருகிலுள்ள கால்வாய்கள் (மல்லிங்காபுரம் கால்வாய்) மற்றும் கண்மாய்கள் விவசாயப் பாசனத்திற்கு உதவுகின்றன.
மல்லிங்காபுரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.