தினம் ஒரு ஊர் – குள்ளப்புரம்

குள்ளப்புரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
குள்ளப்புரம் (Gullapuram) தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. கொடைக்கானல் இந்த இடத்திற்கு வடக்கே உள்ளது. வராக நதி சோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீராக வருகிறது. இது பெரியகுளம் வழியாக சென்று குள்ளப்புரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகள் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. குள்ளப்புரம் பகுதியில் இவ்வாண்டு கம்பு அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் நெல், தென்னை, வாழை, கரும்பு மற்றும் இதர தோட்டப் பயிர்கள் முக்கியமாக சாகுபடி செய்யப்படுகின்றன. வைகை அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குள்ளப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குள்ளப்புரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.