தினம் ஒரு ஊர் – அதிகரட்டி

தினம் ஒரு ஊர் – அதிகரட்டி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குன்னூர்
பரப்பளவு – 18 Sq.Km.
மக்கள் தொகை – 14,178
குடும்பங்கள் – 4,209
தொழில் – விவசாயம், சுற்றுலா
அதிகரட்டி (Adikaratti) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின் தென்னிந்திய ரத்தினமான குன்னூர் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இது உதகமண்டலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இது தென்னிந்தியாவின் நீலகிரிப் பகுதியில் உள்ள மிகப்பெரிய கிராமங்களில் ஒன்றாகும். நீலகிரியின் மிகப்பெரிய ‘படுக ஹட்டி’களில் (படுக இன மக்களின் கிராமம்) இதுவும் ஒன்றாகும். தேயிலை பயிரிடுதல் இக்கிராம மக்களின் முக்கியத் தொழிலாகும். நீலகிரியின் உள்ளூர் மொழியான ‘படுக’ மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.
அதிகரட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.