Appam, Daily Updates
தினம் ஒரு ஊர் – கொணவக்கரை
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கோத்தகிரி
பரப்பளவு – 3716 ஹெக்டேர்
மக்கள் தொகை – 7,511
ஆண்கள் – 3,676
பெண்கள் – 3,835
குடும்பங்கள் – 2,207
தொழில் – விவசாயம், சுற்றுலா

கொணவக்கரை (Konavakorai) என்பது நீலகிரியின் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இது மாவட்டத் தலைமையகமான உதகமண்டலத்திலிருந்து கிழக்கே 25 கி.மீ தொலைவிலும், கோத்தகிரியிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊரின் மலைப்பகுதியில், பழைய காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் உள்ளன. பசு, கன்று, ஆடு, குதிரை போன்ற விலங்குகள், குதிரையில் மனித உருவம் அமர்ந்திருப்பது, பெரிய மனித உருவம் ஒன்றின் முன் சிறிய வில்லேந்திய மனிதர்கள் போன்ற ஓவியங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் வெள்ளை நிறங்கொண்டு வரையப்பட்டவை.
கொணவக்கரை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6