Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கோடநாடு

தினம் ஒரு ஊர் – கோடநாடு
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கோத்தகிரி
பரப்பளவு – 3327.81 ஹெக்டேர்
மக்கள் தொகை – 4,153
ஆண்கள் – 2,022
பெண்கள் – 2,131
குடும்பங்கள் – 1,232
தொழில் – விவசாயம், சுற்றுலா

கோடநாடு என்பது தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கோத்தகிரியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோடநாடு பகுதியில் ‘கோடநாடு காட்சி முனை’ ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். கோடநாடு காட்சி முனை பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. அங்குள்ள தொலைநோக்கி மூலம் தாழ்வாக அமைந்துள்ள பசுமையான பள்ளத்தாக்குகள், பல்வேறு தேயிலைத் தோட்டங்கள், தெங்குமரஹடா, பவானிசாகர் அணை நீர்த்தேக்கம், திப்பு சுல்தானின் படை முகாம்கள், மோயார் பள்ளத்தாக்கு, மோயார் ஆறு, ரங்கசாமி சிகரங்கள் – பாறைத் தூண்கள் ஆகியவற்றைக் காணலாம்.

கோடநாடு மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.