Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – சோங்வே

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – சோங்வே
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 27,656 கிமீ²
மக்கள் தொகை – 1,344,687
தலைநகரம் – இவ்வாவா
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – விவசாயம்

ஜெபிப்போம்,
சோங்வே (Songwe), தான்சானியாவின் 31 நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும்.
சோங்வே மாகாணத்தில் குவிம்பா மலை, கிபாலா மலை, லின்சித்வா குகை, இலோம்வா மலை, கிசும்புசி மலை, கசிது மலை, சிங்கம்போ மலை, மவுண்ட் புங்வே, சிங்கம்போ மலை, நங்கோங்கோ மலை, மலிங்கா மலை ஆகிய மலைகள் உள்ளன. மேலும் வன இருப்புக்கள் கைசும்பே காடு, திரு காடு, மசாவே காடு, மெங்கோ காடு, நோண்டா சாம்போ காடு மற்றும் சிங்காம்போ காடு ஆகும். முக்கிய நீர்நிலைகளில் மோம்பா ஆறு, சோங்வே ஆறு மற்றும் ருக்வா ஏரி ஆகியவை அடங்கும். மக்காச்சோளம், நெல், பீன்ஸ், சோளம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை முக்கிய பயிராகும்.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.