Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – வடக்கு கேப்

தினம் ஒரு நாட்டின் மாநிலம்                                 – வடக்கு கேப்
நாடு – தென்னாப்பிரிக்கா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 372,889 கிமீ²
மக்கள் தொகை – 1,355,629
தலைநகரம் – கிம்பர்லி
அதிகாரப்பூர்வ மொழி – ஆஃப்ரிகான்ஸ்
தொழில் – சுரங்கத் தொழில், விவசாயம்

ஜெபிப்போம்,

வடக்கு கேப் (Northern Cape), தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் பரப்பளவில் மிகப் பெரியதும் மிகக் குறைந்த மக்கள்தொகை உடையதுமான மாகாணம் ஆகும்.
வடக்கு கேப் கலஹாரி ஜெம்ஸ்போக் தேசியப் பூங்கா, போட்ஸ்வானாவுடன் பகிரப்பட்ட ஒரு சர்வதேசப் பூங்கா, ஆக்ராபிசு அருவி, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள், அலெக்சாண்டர் விரிகுடா, ‘குருமன் கண்’ எனப்படும் இயற்கை நீருற்று, ஆரஞ்சு ஆறு ஆகியவற்றை உள்ளடக்கியது. மாகாணத்தில் சுரங்கத் தொழில் ஒரு முக்கியத் தொழிலாகும். மாகாணம் முழுவதும் வைரங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.

வடக்கு கேப் மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.