தினம் ஓர் ஊர் – கீழப்பாவூர் (Keezhapavur) – 03/03/25

தினம் ஓர் ஊர் – கீழப்பாவூர் (Keezhapavur)
மாவட்டம்-தென்காசி
வட்டம்-ஆலங்குளம்
மாநிலம்-தமிழ்நாடு
மக்கள் தொகை-44,462
கல்வியறிவு-67%
மாவட்ட ஆட்சியர்-Bro. Dr. G.S.Sameeran, I.A.S
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-Bro. Aravind, T.P.S.,
District Revenue Inspector-Bro. M.Nagaranjan
மக்களவைத் தொகுதி-தென்காசி
சட்டமன்றத் தொகுதி-ஆலங்குளம்
Principal District Judge -Bro. B. Rajavel (Tenkasi)
Additional District Judge-Bro. S. Manojkumar (Tenkasi)
Chief Judicial Magistrate -Bro. C.Kathiravan (Tenkasi)
District Munsif -Sis. A. Muthuselvam (Alangulam)
Judicial Magistrate -Sis. S. Ananthavalli (Alangulam)
ஜெபிப்போம்
கீழப்பாவூர் (Keezhapavur), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். கீழப்பாவூருக்கு வரலாற்றில் பாகூர் ஆன சத்திரிய சிகாமணி நல்லூர் என்றும் பெயருண்டு. இதன் பெரிய குளத்திற்கு நீர் வரும் சிற்றாற்று சித்திர வாய்க்காலுக்கு வீரராஜேந்திரன் வாய்க்கால் என்றும் ஒரு பெயருண்டு. கீழப்பாவூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்த கீழப்பாவூர் பேரூராட்சியின் கிழக்கில் 10 கிமீ தொலைவில் ஆலங்குளமும், மேற்கில் 15 கிமீ தொலைவில் தென்காசியும், வடக்கில் 5 கிமீ தொலைவில் சுரண்டையும், தெற்கில் 15 கிமீ தொலைவில் கடையம் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியின் அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இப்பேரூராட்சி 14.18 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 148 தெருக்களும், 11934 வீடுகளும் கொண்டுள்ளது. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஆலங்குளம் வட்டத்தில் அமைந்த கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.
இப்பேரூராட்சி 44,462 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% உள்ளனர். கீழப்பாவூரில் சராசரி கல்வியறிவு 67% உள்ளது. இதில் ஆண்கள் 76% பேரும், பெண்கள் 57% பேரும் இருக்கிறார்கள். கீழப்பாவூரில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக, இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
கீழப்பாவூர் பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலையை கர்த்தர் ஆசீர்வதித்து வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் பாதுகாக்கும்படி ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
கீழப்பாவூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். கீழப்பாவூர் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். கீழப்பாவூர் பேரூராட்சி தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். கீழப்பாவூர் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.