தினம் ஒரு நாட்டின் மாநிலம் – முச்சிங்கா

ஜெபிப்போம்,
முச்சிங்கா (Muchinga), ஜாம்பியாவின் பத்து மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இது, முச்சிங்கா மலைகளின் இருபுறமும் அமைந்துள்ளது.
முச்சிங்கா மாகாணத்தின் முக்கிய ஆறுகள், லுவாங்வா நதியும், சம்பேஷி நதியும் ஆகும். மேலும், லவுஷி மாண்டா தேசியப் பூங்கா, வடக்கு லுவாங்வா தேசியப் பூங்கா மற்றும் தெற்கு லுவாங்வா தேசியப் பூங்கா ஆகியவை உள்ளன. மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, பீன்ஸ் போன்ற முக்கிய பயிர்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்குத் துணைபுரிகின்றன. இங்கு தங்கம், தாமிரம், நிக்கல், மாங்கனீசு, பாஸ்பேட் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கனிமப் படிவுகள் உள்ளன.
முச்சிங்கா மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.