Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – பிரக்னா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – பிரக்னா
கண்டம் – ஆப்பிரிக்கா
நாடு – மௌரிடானியா
மாநிலம் – பிரக்னா
மொத்தப் பரப்பளவு – 33,800 கிமீ²
மக்கள் தொகை – 391,310
தலைநகரம் – அலெக்
அலுவல் மொழி – அரபு
முதன்மைத் தொழில் – விவசாயம்

பிரக்னாக்காக ஜெபிப்போம்,

பிரக்னா (Brakna) என்பது தென்மேற்கு மௌரித்தானியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். இதற்கு பிரக்னா அமீரகத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிராக்னா மாநிலத்தின் பொருளாதாரம், முதன்மையாக விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பாரம்பரிய கைவினைத் தொழில்களை அடிப்படையாகக் கொண்டது. பிராக்னா பகுதி செனகல் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளதால், ஆற்றங்கரைப் பகுதிகளில் விவசாயம் செழிப்பாக நடைபெறுகிறது. இப்பகுதியில் நெல், கம்பு, சோளம் போன்ற தானியங்களும், காய்கறிகளும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு ஆடுகள், மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இறைச்சி, பால் மற்றும் தோல் உற்பத்திக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. பிரக்னா மாநிலம், பாலைவன நிலப்பரப்புகள், பசுமையான விவசாய நிலங்கள், பருவகால ஈரநிலங்கள், ஆற்றங்கரைச் சமவெளிகள் மற்றும் பாரம்பரிய கலாச்சார அனுபவங்களை வழங்குகிறது.

பிரக்னா மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.