Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிராண்ட் க்ரூ

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிராண்ட் க்ரூ
கண்டம் – ஆப்பிரிக்கா
நாடு – லைபீரியா
மாநிலம் – கிராண்ட் க்ரூ
மொத்தப் பரப்பளவு – 3,895 கிமீ²
மக்கள் தொகை – 109,342
தலைநகரம் – பார்க்லேவில்லே
அலுவல் மொழி – ஆங்கிலம், க்ரூ
முதன்மைத் தொழில் – விவசாயம்

கிராண்ட் க்ரூ கவுண்டிக்காக ஜெபிப்போம்,

கிராண்ட் க்ரூ (Grand Kru) என்பது லைபீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கவுண்டி ஆகும். இதன் தெற்குப் பகுதி அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ளது.
கிராண்ட் க்ரூ கவுண்டியில் மலைப்பகுதி நெல், மரவள்ளிக்கிழங்கு, ஆரஞ்சு, எலுமிச்சை, மாம்பழம், சீதாப்பழம், பலாப்பழம் தேங்காய், கரும்பு, வாழை, காபி, கோகோ, மூங்கில், பனை கொட்டைகள் மற்றும் பியாசவா பனை ஆகியவை மிக முக்கியமான பயிர்களாகும். கடற்கரையோரத்தில் மீன்பிடித்தலும் முக்கியப் தொழிலாகும். முக்கிய ஈர்ப்புகளில் சாஸ்டவுன் கடற்கரை, கிராண்ட் செஸ் கடற்கரை, வெடாபோ மற்றும் நெமியா கடற்கரைகள், அரிய வகை வனவிலங்குகளைக் கொண்ட கிராண்ட் க்ரூ-ரிவர் கீ தேசிய பூங்கா ஆகியவை அடங்கும். இங்கு கவுண்டியில் டார்போ, நோர், மிஸ்னோர், ஸ்னோர் போன்ற பல ஆறுகள் பாய்கின்றன. இந்த ஆறுகளில் ஆங்காங்கே அழகிய நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன.

கிராண்ட் க்ரூ கவுண்டி மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.