தினம் ஒரு ஊர் – தேவாரம்

தேவாரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
தேவாரம் (Thevaram) என்பது தமிழ்நாடு, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது வட்டத் தலைமையிடமான உத்தமபாளையத்திலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் தேவாரம் ஒன்று. மகாத்மா காந்தி இங்கு வருகை தந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். தேவாரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால், கேரளா எல்லையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளின் அழகிய காட்சிகளை இங்கிருந்து ரசிக்கலாம். தேவாரத்திற்கு அருகில் தேவாரம் மலை வியூ பாயிண்ட் அமைந்துள்ளது. இங்குள்ள நிலங்களில் நெல், கரும்பு, காய்கறிகள், பூக்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் பாசன வசதிக்காகக் கால்வாய்கள் மற்றும் கண்மாய்களை நம்பியுள்ளன.
தேவாரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.