Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – தென்கரை

தினம் ஒரு ஊர் – தென்கரை
மாவட்டம் – தேனி
வட்டம் – பெரியகுளம்
பரப்பளவு – 10 ச.கிமீ.
மக்கள் தொகை – 14,838
ஆண்கள் – 7485
பெண்கள் – 7353
குடும்பங்கள் – 3,773
தொழில் – விவசாயம்

தென்கரை கிராமத்துக்காக ஜெபிப்போம்,

தென்கரை (Thenkarai) தமிழ்நாடு, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் அமைந்துள்ள பேரூராட்சி ஆகும். நெல், கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. தென்கரை பகுதியில் மாம்பழ விவசாயம் பிரதானமாக விளங்குகிறது. பெரியகுளம் சிறப்பில் ஒன்றாக விளங்கும் வராக நதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நதியாகும். வைகை ஆற்றின் துணை நதியான வராகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சோத்துப்பாறை அணை, பெரியகுளத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வரும் வராகநதி வடகரை மற்றும் தென்கரை என இரண்டு கிராமங்களாகப் பிரிக்கிறது. தென்கரை, வடகரை, தாமரைக்குளம் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் இந்த அணையால் பயனடைகின்றன. இங்கு விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தின் நினைவாகத் தொடங்கப்பட்ட, 100 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட பாரம்பரியமும் பெருமையும் கொண்ட விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

தென்கரை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.