தினம் ஒரு ஊர் – டொம்புச்சேரி

டொம்புச்சேரி கிராமத்துக்காக ஜெபிப்போம்,
டொம்புச்சேரி (Dombuchery) என்பது தமிழ்நாடு மாநிலத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது வட்டத் தலைமையிடமான போடிநாயக்கனூரிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு டொம்புச்சேரி போஜன் கண்மாய் போன்ற கண்மாய்கள் நீர்ப்பானத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. டொம்புச்சேரி கிராமத்தில் விவசாயமே பிரதான வாழ்வாதாரமாக விளங்குகிறது. இப்பகுதியில் நெல் சாகுபடி பரவலாகச் செய்யப்படுகிறது. மேலும் தென்னை (தேங்காய்/கொப்பரை), திராட்சை மற்றும் காய்கறிகள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பு ஒரு முக்கிய விவசாயச் சார்ந்த தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஊர் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு உண்டானது. இங்கு பிராமி எழுத்தில் கல்வெட்டு உள்ளது.
டொம்புச்சேரி மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.