தினம் ஒரு ஊர் – கீழ் குந்தா

தினம் ஒரு ஊர் – கீழ் குந்தா
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குந்தா
பரப்பளவு – 24.21 ச.கி.மீ.
மக்கள் தொகை – 8,886
ஆண்கள் – 4280
பெண்கள் – 4606
குடும்பங்கள் – 2,636
தொழில் – விவசாயம், சுற்றுலா
கீழ் குந்தா (Kilkundah) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் 26 குக்கிராமங்களை உள்ளடக்கியது. கீழ் குந்தா, உதகமண்டலத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு குந்தா நீர்மின்னாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் முக்கியத் தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. மேலும் அம்மக்கள் தக்காளி, பழங்கள் மற்றும் மலைக் காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர்.
கீழ் குந்தா மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.