தினம் ஒரு ஊர் – எடப்பள்ளி

எடப்பள்ளி (Yedappalli), தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். குன்னூரிலிருந்து கோத்தகிரிக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவிலிருந்து சுமார் 4.7 கி.மீ. தொலைவில் எடப்பள்ளி அமைந்துள்ளது. எடப்பள்ளியில் இரண்டு சதுப்பு நிலங்களிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது. சதுப்பு நிலத்திலிருந்து வழிந்தோடும் நீர் ஒரு வற்றாத ஓடையாக உருவாகி, ஸ்பிரிங்-ஃபீல்ட் மற்றும் ஹை-ஃபீல்ட் தேயிலைத் தோட்டங்கள் வழியாக தென்மேற்காகப் பாய்ந்து, வலுப்பெற்று, வெலிங்டன் ஜிம்கானா கிளப்பின் கோல்ஃப் மைதானத்தைக் கடந்து, இறுதியில் கங்குத்தோறையாக கூனூர் ஆற்றில் இணைகிறது.
எடப்பள்ளி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.