Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – வடமேற்கு மாகாணம்

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – வடமேற்கு மாகாணம்
நாடு – ஜாம்பியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 125,826 கிமீ²
மக்கள் தொகை – 1,278,357
தலைநகரம் – சோல்வெசி
அதிகாரப்பூர்வ மொழி – ஆங்கிலம், லுண்டா
தொழில் – விவசாயம்

ஜெபிப்போம்,

வடமேற்கு மாகாணம் (North-Western Province), ஜாம்பியாவின் பத்து மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது நாட்டின் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட மாகாணமாகும்.
விவசாயம் இங்கு முக்கியத் தொழிலாக உள்ளது. சோளம் இங்கு விளையும் முக்கியப் பயிராகும். முக்கிய ஈர்ப்புகளில் மேற்கு லுங்கா தேசியப் பூங்கா, காஃபு தேசிய பூங்கா, கிரிப்டோசெபாலம் காடுகள், ஜாம்பேசி ஆறு, புசங்கா சமவெளி நியாம்ப்வேசு நீர்வீழ்ச்சி, முட்டாண்டா நீர்வீழ்ச்சி ஆகியவை அடங்கும்.

வடமேற்கு மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.