தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஓட்ஜோசோன்ட்ஜுபா

ஓட்ஜோசோன்ட்ஜுபா மாநிலத்துக்காக ஜெபிப்போம்,
ஓட்ஜோசோன்ட்ஜுபா (Otjozondjupa) நமீபியாவின் பதினான்கு மாநிலங்களில் ஒன்றாகும்.
ஓட்ஜோசோன்ட்ஜுபா மாநிலத்தில் க்ரூட்ஃபோன்டெய்னுக்கு 24 கிலோமீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான ஹோபா விண்கல் அமைந்துள்ளது. 60 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள இது, பூமியில் அறியப்பட்ட மிகப்பெரிய விண்கல்லாகவும், கோளின் மேற்பரப்பில் இயற்கையாகக் காணப்படும் மிகப்பெரிய இரும்புத் திரளாகவும் விளங்குகிறது. முக்கிய இடங்களில் வாட்டர்பெர்க் பீடபூமி பூங்கா, டிராகன்ஸ் பிரீத் குகை மற்றும் குகைக்குள்ளிருக்கும் உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி ஆகியவை அடங்கும். இம்மாநிலத்தின் பொருளாதாரம் விவசாயம், சுரங்கத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த மாநிலம் கால்நடை வளர்ப்புக்குப் பெயர் பெற்றவை.
ஓட்ஜோசோன்ட்ஜுபா மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.