தினம் ஒரு நாட்டின் மாநிலம் – குனெனே

குனெனே மாநிலத்துக்காக ஜெபிப்போம்,
குனெனே (Kunene), நமீபியாவின் பதினான்கு மாநிலங்களில் ஒன்றாகும். இம்மாநிலத்தின் பெயர், அங்கோலாவுடனான வடக்கு எல்லையை உருவாக்கும் குனெனே நதியிலிருந்து வந்தது.
சுரங்கத் தொழில் குனெனே மாநிலத்தின் மிக முக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரத் துறையாகும். 2012ஆம் ஆண்டில், சீன நிறுவனம் ஒன்று இப்பகுதியில் 2.37 பில்லியன் டன் இரும்புத் தாதுவை கண்டறிந்தது. இது அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய மிகப்பெரிய இருப்பாகும். இப்பகுதியில் கோபால்ட் போன்ற முக்கியமான தாதுக்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அத்துடன் தங்கம், பேஸ் மெட்டல்கள் மற்றும் பல்வேறு கனிம வளங்கள் இங்கு அதிகளவில் உள்ளன. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பாறை செதுக்கல்களைக் கொண்ட டிவிஃபெல்ஃபோன்டைன் தளம் இப்பகுதியில்தான்
அமைந்துள்ளது. இது 2007இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
குனெனே மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.