தினம் ஒரு நாட்டின் மாநிலம் – சிலா

சிலா மாநிலத்துக்காக ஜெபிப்போம்,
சிலா (Sila) சாட் நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்.
சிலா மாநிலத்திலுள்ள மக்களின் முதன்மை வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். குறிப்பாக சோளம், கம்பு மற்றும் பிற தானியங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. ஒட்டகங்கள், ஆடுகள், செம்மறியாடுகள், கழுதைகள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகள் இங்கு பரவலாக வளர்க்கப்படுகின்றன. சிலா மாநிலம் அண்டை நாடுகளின் எல்லைக்கு அருகில் இருப்பதால், இங்கிருந்து சூடான் மற்றும் பிற மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகம் தீவிரமாக நடைபெறுகிறது. சிலா மாநிலம் அதன் கரடுமுரடான மலைகள் (Dar Sila), பாலைவன மற்றும் ஆங்காங்கே சில குன்றுகளுடனும் காணப்படுகிறது. தலைநகரான கோஸ் பெய்டா நகரத்தில் உள்ள கோஸ் பெய்டா தேசிய பூங்கா ஒரு முக்கிய தளமாகும். முக்கிய இன மொழியியல் குழுக்கள் பிர்கிட், டார் சிலா தாஜு, ஃபோங்கோரோ, ஃபர், கஜாக்சே, கராங்கா, கிபெட், குஜர்கே, ருங்கா மற்றும் சின்யார்.
இந்த மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.