தினம் ஒரு ஊர் – வடவீரன்நாயக்கன்பட்டி

வடவீரன்நாயக்கன்பட்டி கிராமத்துக்காக ஜெபிப்போம்,
வடவீரன்நாயக்கன்பட்டி (Vadaveeranaickenpatty) என்பது தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தேனி மாவட்டத் தலைமையகத்திலிருந்து வடக்கு நோக்கி 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அருகில் உள்ள பெரிய நகரம் தேனி அல்லிநகரம் ஆகும். இந்த இடம் தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளது. இந்தப் பகுதியில் நெல், கரும்பு, பருத்தி, மாம்பழம், வாழை, சோளம், மக்காச்சோளம், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், முருங்கை ஆகியவை பரவலாகப் பயிரிடப்படுகின்றன. கிராமத்தின் பல பகுதிகளில் தென்னந்தோப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன. விவசாயத்தோடு இணைந்து உபதொழிலாகக் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்பு) இங்குள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
வடவீரன்நாயக்கன்பட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.