தினம் ஒரு ஊர் – பண்ணைப்புரம்

பண்ணைப்புரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
பண்ணைப்புரம் (Pannaipuram) தமிழ்நாடு, தேனி, உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். தேனியிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் பெரும்பான்மையாக ஏலக்காய் மற்றும் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். கேரள எல்லைக்கு அருகில் உள்ளதால் ஏலக்காய் தோட்டத் தொழில்கள் அதிகம் உள்ளன. இது கேரளாவைச் சேர்ந்த ஏலக்காய் உற்பத்தி செய்யக்கூடிய தோட்ட முதலாளிகள் அதிகம் கொண்ட பேரூராட்சியாகும். போடி மேற்கு மலைகளில் அமையவுள்ள இந்திய நியூட்ரினோ ஆய்வகத் தளத்திற்குத் தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் பண்ணைபுரம் அமைந்துள்ளது. கேரள எல்லையில் அமைந்துள்ள சதுரங்கப்பாறை வியூ பாயிண்ட், ராமக்கல்மேடு ஆகியவை பண்ணைப்புரத்தில் இருந்து சுமார் 7-8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.
பண்ணைப்புரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.