Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கேத்தி

தினம் ஒரு ஊர் – கேத்தி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குன்னூர்
பரப்பளவு – 19.20 Sq.Km.
மக்கள் தொகை – 24534
ஆண்கள் – 12014
பெண்கள் – 12520
தொழில் – விவசாயம்

கேத்தி (Ketti) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் வட்டத்தில், கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கிராமம் ஆகும். உதகமண்டலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தியாவில் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்காக, குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, இந்த கேத்தி பள்ளத்தாக்கு கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் நின்று பார்க்கும் பொழுது செழுமையான பசுமை, மிகப்பெரிய வானுயர்ந்த மலைகள், மரங்கள் மற்றும் குகைகளுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளங்கள் ஆகியவை சிறப்பான காட்சி அளிக்கிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, கட்டுமானத் தொழில், சுற்றியுள்ள ஊசித் தொழிற்சாலைகள், காளான் தொழிற்சாலைகள், பூந்தோட்டம் போன்ற முக்கிய தொழில்களாகும்.

கேத்தி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6