தினம் ஒரு ஊர் – குச்சனூர்

குச்சனூர் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
குச்சனூர் (Kuchanur) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குச்சனூர் பேரூராட்சி தேனி மாவட்டத்திலிருந்து 20.00 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. குச்சனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் மிக அதிக அளவில் பயிரிடப்படும் முதன்மைப் பயிராகும். மேலும் தென்னை, வாழை போன்ற நீண்டகாலப் பயிர்களும், கரும்பு மற்றும் பருத்தி உள்ளிட்ட பணப்பயிர்களும் இங்கு பரவலாக விவசாயம் செய்யப்படுகின்றன. முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி மற்றும் உள்ளூர் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது. விவசாயத்திற்கான முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக ராஜவாய்க்கால் விளங்குகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெறுகின்றன.
குச்சனூர் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.