தினம் ஓர் ஊர் – கிள்ளியூர் (Killiyoor) – 21/08/23

தினம் ஓர் ஊர் – கிள்ளியூர் (Killiyoor)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 56,537
மொத்த பரப்பளவு – 10.08 சதுர கிலோமீட்டர்கள் (3.89 sq mi)
கல்வியறிவு – 72.58%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – கிள்ளியூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Rajeshkumar (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. S.Arulmurugan
ஜெபிப்போம்
கிள்ளியூர் (Killiyur), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி புதுக்கடை – திங்கள்நகர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கிள்ளியூர் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
கிள்ளியூர் வட்டம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வருவாய் வட்டம், பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்தில் உள்ளது. இது பைங்குளம் மற்று மிடாலம் என 2 உள்வட்டங்களும், 26 வருவாய் கிராமங்களும் கொண்டது. இந்த பேரூராட்சியில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், உள்வட்டங்களுக்காக ஜெபிப்போம்.
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் கொல்லஞ்சி, முள்ளங்கினாவிளை, மத்திக்கோடு, மிடாலம். நட்டாலம், பாலூர், திப்பிறமலை, இனயம்புத்தன்துறை என 8 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. கிள்ளியூர் ஊராட்சி மன்றங்களுக்காகவும், ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
கிள்ளியூர் பேரூராட்சியின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S.Rajeshkumar அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையோடு நிறைவேற்ற ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி 10.08 சகிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த வட்டம் 18 வார்டுகளும், 36 தெருக்களும், 6,379 வீடுகளும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காக, வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஜெபிப்போம்.
கிள்ளியூர் பேரூராட்சியில் 78 குடிநீர் இணைப்புகள், 1 சிறு மின்விசைக் குழாய்கள், 15 கைக்குழாய்கள், 3 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 6 உள்ளாட்சிக் கட்டடங்கள், 2 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 24 ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள்ளன. இதற்காக ஜெபிப்போம்.
கிள்ளியூர் பேரூராட்சியில் மொத்த மக்கள் தொகை 56,537 ஆகும். இங்குள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியில் உள்ள சிறுபிள்ளைகளுக்காகவும், வாலிப பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கொடுக்கும்படி ஜெபிப்போம். வேலைக்காக காத்திருக்கும் வாலிப பிள்ளைகளுக்கு படிப்புக்கேற்ற வேலையை அவர்களுக்கு கொடுத்து அவர்களின் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
கிள்ளியூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்யும்படி ஜெபிப்போம். அநேக தேவபிள்ளைகள் கர்த்தருக்காக எழும்பி பிரகாசிக்க ஜெபிப்போம். ஆண்டவருடைய வார்த்தை ஒவ்வொரு கிராமங்களிலும் விதைக்கப்பட ஜெபிப்போம். அதன்மூலம் அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.