தினம் ஒரு நாட்டின் மாநிலம் – மாரா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – மாரா
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 21,760 கிமீ²
மக்கள் தொகை – 2,372,015
தலைநகரம் – முசோமா
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – விவசாயம்
ஜெபிப்போம்,
மாரா (Mara), தான்சானியா நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
தானியங்களை பயிர் இடுதல், தங்கச் சுரங்கங்களை அகழ்தல், மீன் பிடித்தல், கால்நடை மேய்ச்சல், சுற்றுலா, கால்நடை வளர்ப்பு ஆகியவை மாரா மாகாண மக்களின் முக்கியப் பொருளாதாரம் ஆகும். இப்பகுதியின் முக்கிய பயிர்களில் வாழைப்பழம், காபி, மரவள்ளிக்கிழங்கு, தோட்டக்கலை மற்றும் பருத்தி ஆகியவை அடங்கும். மாரா மாகாணத்தில் உலகப் பாரம்பரியக் களமான புகழ்பெற்ற திறந்தவெளி செரெங்கெட்டி தேசியப் பூங்கா, மசாய் மாரா தேசியப் பூங்கா, மாரா ஆறு, விக்டோரியா ஏரி அமைந்துள்ளது. இப்பகுதியில் பெரும்பான்மையாக மசாய் மக்கள் வாழ்கின்றனர்.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.