தினம் ஒரு நாட்டின் மாநிலம் – டோடோமா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – டோடோமா
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 41,311 கிமீ²
மக்கள் தொகை – 3,085,625
தலைநகரம் – டோடோமா
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – விவசாயம்
ஜெபிப்போம்,
டோடோமா (Dodoma), தான்சானியாவின் 31 நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இது மத்திய தான்சானியாவில் அமைந்துள்ளது.
டோடோமாவில் 70%க்கும் அதிகமான திராட்சையை உற்பத்தி செய்கிறது. ஜாம், சாறு, ஜெல்லி, ஒயின், திராட்சை விதை சாறுகள், உலர் திராட்சை, வினிகர் மற்றும் திராட்சை விதை எண்ணெய் ஆகியவை திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஆகும். தென்னாப்பிரிக்காவிற்குப் பிறகு கண்டத்தில் இரண்டாவது பெரிய ஒயின் தொழிலாகும். டோடோமா, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான, கொண்டோவா பாறை-கலைத் தளங்களின் தாயகமாகும்.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.