தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிராண்ட் கெடே

கிராண்ட் கெடே கவுண்டிக்காக ஜெபிப்போம்,
கிராண்ட் கெடே (Grand Gedeh) என்பது தென்கிழக்கு லைபீரியாவில் உள்ள ஒரு கவுண்டி ஆகும். கிராண்ட் கெடேவில் பல்வேறு பள்ளத்தாக்குகள், நீர்வழிகளைக் கொண்ட நடுத்தர அளவிலான குன்றுகளுடன் கூடிய தாழ்வான வெப்பமண்டல காடுகள் மற்றும் பசுமை மாறா காடுகள் உள்ளன. மேட்டு நிலங்கள் நெல் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளன. தாழ்வான பகுதிகள் சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கொக்கோ, வாழை, உருளைக்கிழங்கு, காய்கறிகள், ரப்பர், காபி மற்றும் கரும்பு சாகுபடிக்கு உகந்ததாக உள்ளன. கிராண்ட் கெடே கவுண்டியில் இரண்டு சமூகக் காடுகள் உள்ளன. கிராண்ட் கெடேயின் மிகவும் பிரபலமான இயற்கை ஈர்ப்புகளில் மிக அருகிவரும் நிலையில் உள்ள மேற்கு சிம்பன்சிகளைக் கொண்ட கிரேபோ-கிரான் தேசிய பூங்கா, லைபீரியாவின் மிக நீளமான நதியான கவல்லா நதியை ஆகியவை அடங்கும். இங்குள்ள மக்கள் தொகையில் முதன்மையாக கிரான் மொழி பேசும் சமூகத்தினரும், தென்கிழக்கு லைபீரியாவைச் சேர்ந்த பிற இனக்குழுவினரும் உள்ளனர்.
கிராண்ட் கெடே கவுண்டி மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.