தினம் ஒரு ஊர் – மேல்மங்கலம்

மேல்மங்கலம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
மேல்மங்கலம் (Melmangalam) என்பது தமிழ்நாடு, அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இவ்விடம் தேனி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் இவ்விடத்திற்கு வடக்கே உள்ளது. வராக நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இது பெரியகுளம் வழியாக சென்று மேல்மங்கலம் உள்ளிட்ட கிராமப்புறங்கள் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. பாம்பார் நதி, முதிரப்புழா ஆறு ஆகியவை மேல்மங்கலம் அருகே உள்ள ஆறுகளாகும். மேல்மங்கலம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 600 ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லைக் கொட்டுவதற்குக்கூட போதிய இடம் இல்லாத நிலை உள்ளது. சேமிப்புக் கிடங்குகள், கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட ஜெபிப்போம்.
மேல்மங்கலம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.