தினம் ஒரு ஊர் – பொட்டிபுரம்

பொட்டிபுரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
பொட்டிபுரம் (Pottipuram) என்பது தமிழ்நாடு, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். பொட்டிபுரம், சின்னமனுரிலிருந்து 16 கி.மீ., தொலைவிலும், தேனியிலிருந்து 32 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இது, தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு கிளையான அம்பரப்பர் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அருகில் உள்ள அம்பாரப்பர் மலைப்பகுதியில் இந்திய அரசின், அணுசக்தி துறை, நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் அமைக்க செயல்படுகிறது. பொட்டிபுரம், தேனியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பொட்டிபுரத்தில் ஆழ்துளை கிணறு நீர்பாசானம் மூலம், கேழ்வரவு, தக்காளி, கரும்பு, நெல் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. ஆடு மாடு மேய்த்தல் முக்கியத் தொழிலாகும். பொட்டிபுரத்தில் அரசு துணை கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது.
பொட்டிபுரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.