தினம் ஒரு ஊர் – பர்லியார்

பர்லியார் (Burliyar) என்பது தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ள பர்லியார், மலைப்பாதையில் ஒரு ஓய்வு இடமாக மிகவும் அறியப்படுகிறது.
பர்லியார் பகுதியில் மசாலாப் பொருட்களும் (கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, மிளகு, வெண்ணிலா), பழங்களும் (மங்குஸ்தான், பலாப்பழம், துரியன், லிச்சி, லாங்சல், ஸ்டார் பழம், கிரேப்ஃபுரூட், ரோஸ் ஆப்பிள், மாம்பழம்) பயிரிடப்படுகின்றன. பர்லியார் பகுதியில் விளையும் பழங்கள் சர்வதேச அளவில் பெருமை பெற்றுள்ளது. குறிப்பாக, இங்கு விளைவிக்கப்படும் துரியன் பழத்திற்கு அதிக மவுசு உள்ளது.
பர்லியார் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.