தினம் ஒரு ஊர் – கோம்பை

கோம்பை கிராமத்துக்காக ஜெபிப்போம்,
கோம்பை (Kombai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கோம்பை, உத்தமபாளையம் போடிநாயக்கனூர் சாலை வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரானது மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ஏலமலைகளையும் கிழக்கே சாலைமலைக்குன்றையும் கொண்டு இடையே அமைந்துள்ளது. கோம்பை என்பது முடக்கு, மலையடிவாரம், தென்னை என்று பல பொருள் குறிக்கும் சொல் என்றாலும், இங்கு பன்றிமலை, மேற்குமலை, கழுகுமலை என்னும் மூன்று மலைகளிடையே முன்பு முடங்கிக் கிடந்ததால் முடங்கில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. இவ்வூர் கோம்பை நாய் வகைக்குப் பெயர்பெற்றதாகும். இங்கு வாழை, தென்னை, நிலக்கடலை, சோளம், கம்பு, காய்கறிகள் ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன.
கோம்பை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.